Posts

Showing posts from 2017
Image
ஒளவையார் - மூதுரை வெண்பா : 4 அட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளாய் நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும். விளக்கம்  நற்பண்பு இல்லாதோரிடம் நன்கு பழகினாலும் அவர்கள் நண்பர்களாக மாட்டார்கள். நம் நிலை தாழ்ந்தாலும் நற்பண்புள்ளோர் சிறந்தவர்களாகவே பழகுவர். அவர்கள் நட்பு எவ்வளவு காய்ச்சினாலும் சுவை குன்றாத பாலைப் போன்றது. தீயிலிட்டு சுட்டாலும் மேலும் மேலும் வெளுக்கும் சங்கினைப் போன்றது அவர் நட்பு. English Translation Milk however long heated will not lose its taste Men with low morals do not make good friends Noble men do not change, even if they suffer poverty Like conch-shells remaining white even when burnt வெண்பா : 10 நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை விளக்கம்  உழவன் நெல்லுக்குப் பாய்ச்சும் நீர் அங்கிருக்கும் புல்லுக்கும் பயனைத் தரும். அது போலவே இந்தப் பழமையான உலகில் நல்...
Image
கண்ணுக்கு மையழகு கவிதைக்கு பொய்யழகு. கன்னத்தில் குழியழகு கார்கூந்தல் பெண்ணழகு. கண்ணுக்கு மையழகு கவிதைக்கு பொய்யழகு. கன்னத்தில் குழியழகு கார்கூந்தல் பெண்ணழகு. கண்ணுக்கு மையழகு கவிதைக்கு பொய்யழகு. கன்னத்தில் குழியழகு கார்கூந்தல் பெண்ணழகு. இளமைக்கு நடையழகு முதுமைக்கு நரையழகு. கள்வர்க்கு இரவழகு காதலர்க்கு நிலவழகு. நிலவுக்கு கரையழகு பறவைக்கு சிறகழகு. நிலவுக்கு கரையழகு பறவைக்கு சிறகழகு. அவ்வைக்கு கூனழகு அன்னைக்கு சேயழகு. கண்ணுக்கு மையழகு கவிதைக்கு பொய்யழகு. கன்னத்தில் குழியழகு கார்கூந்தல் பெண்ணழகு. கண்ணுக்கு மையழகு கவிதைக்கு பொய்யழகு. கன்னத்தில் குழியழகு கார்கூந்தல் பெண்ணழகு. கண்ணுக்கு மையழகு கவிதைக்கு பொய்யழகு. கன்னத்தில் குழியழகு கார்கூந்தல் பெண்ணழகு. கண்ணுக்கு மையழகு கவிதைக்கு பொய்யழகு. கன்னத்தில் குழியழகு கார்கூந்தல் பெண்ணழகு. விடிகாலை விண்ணழகு விடியும் வரை பெண்ணழகு. நெல்லுக்கு நாற்றழகு தென்னைக்கு கீற்றழகு. ஊருக்கு ஆரழகு ஊர்வலத்தில் தேரழகு. தமிழுக்கு ழா அழகு தலைவிக்கு நானழகு. கண்ணுக்கு மையழகு கவிதைக்கு பொய்யழகு. கன்னத்தில் குழியழகு ...
Image
செந்தமிழ் நாடெனும் போதினிலே செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்) வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல காதல் புரியும் அரம்பையர் போல் - இளங் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்) காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் கண்டதோர் வையை பொருனை நதி - என மேவிய யாறு பலவோடத் - திரு மேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்) முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம் எத்தனையுண்டு புவிமீதே - அவை யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்) நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ் மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு (செந்தமிழ்) கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல பல்விதமாயின சாத்திரத்தின் - மணம் பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்) வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தம...